20 May 2009

ரூ.500 கோடி நிவாரண உதவி: பிரணாப் முகர்ஜி

விடுதலைப்புலிகளுடன் நடந்த போர் முடிந்து விட்டது. அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் இலங்கையில் மோதல்களினால் இடம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு உடனடியாக நிவாரண பணிகளை வழங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை பரவலாக்கும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இலங்கை அரசியலமைப்பு சட்டத்துக்கமைய இன பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்

இடம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்காக ஏற்கனவே ரூ.500 கோடி நிவாரண பொருட்களை வழங்க இந்தியா தயாராக வைத்துள்ளது. இது தவிர கூடுதலாக ரூ.100 கோடி நிவாரண உதவியை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். தமிழக அரசும் ரூ.25 கோடி நிவாரண உதவியை வழங்குகிறது.

நிவாரண உதவிகளை வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக உயர் அதிகாரிகளையும், சிறப்பு தூதர்களையும் விரைவில் இந்தியா அனுப்ப உள்ளது. அப்போது நிவாரண உதவிகளும் அனுப்பப்படும்" என்றார் பிரணாப் முகர்ஜி

No comments:

Post a Comment