25 May 2009

தமிழர்களுக்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மீண்டும் பிரச்சினை வெடிக்கும் - பான் கீ மூன்

தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காவிட்டால் மீண்டும் பிரச்சினை வெடிக்கும் என்று இலங்கை அரசுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்தார்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அதிபர் ராஜபக்ஷ அறிவித்ததை தொடர்ந்து ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒரு நாள் பயணமாக நேற்று முன்தினம் இலங்கை சென்று வவுனியாவில் போர் நடந்த பகுதிகளை ஹெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும், இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் பெரும் எண்ணிக்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மானிக் பாம் அகதிகள் முகாமையும் அவர் பார்த்தார்.

No comments:

Post a Comment