25 May 2009

தமிழ் அகதிகள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்: சந்திரஹாசன்

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன்று எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கடந்த 25 வருடங்களாக இலங்கை அகதிகளைப் புனரமைக்கும் அமைப்பின் தலைவராக செயற்பட்டுவரும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகன் எஸ். சீ. சந்திரஹாசன் ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

1983ஆம் இனக்கலவரத்தையடுத்து அகதியாக இந்தியா சென்ற அவர் அகதிகளின் நலன்களைப் பேணும் முகமாக இந்த அமைப்பை நிறுவி நிர்வகித்து வருகிறார். இலங்கை தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்குவதன் மூலம், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவர்களின் சேவைகளையும் பெறமுடியும் என்றார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்த காலப்பகுதியில் இந்தியாவில் உள்ள 25 மாவட்டங்களில் 73,378 இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். தற்சமயம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment