25 May 2009

புலிகள் இயக்கம் மீண்டும் துளிர்விட மாட்டாது : கோத்தபாய

விடுதலை புலிகள் இயக்கம் இந்நாட்டில் மீண்டும் துளிர்விடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவும் அவ்வியக்கம் முற்றாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடங்களில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர் அவர் மேலும் தெரிவிக்கையில்

விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோதமான அமைப்பாகும். எனவே அவ்வமைப்புடன் இயங்கும் துணைக்குழுக்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் செயற்படவேண்டும்.கடந்த காலங்களில் இலங்கையில் பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பதை விடுத்து, விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டன. அவ்வமைப்புகளின் உண்மையான நோக்கங்களை அறிந்து அரசாங்கம் அதற்கு சரியான பதிலடியை கொடுத்து விட்டது. அத்துடன் ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு செயலாளரான தனக்கும், முப்படைத் தளபதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்த கோத்தபாய ராஜபக்ஷ சர்வதேச போர் குற்றம் தொடர்பாகப் பாதுகாப்புச் செயலாளர் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என அறிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் விடுதலை புலிகளின் துணைக் குழுக்களால் விடுக்கப்படும் இவ்வறிக்கைகள் குறித்து நாம் அச்சமடையவில்லை என்றார்

No comments:

Post a Comment