16 May 2009

கடினமான பகுதியில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு விருது-ஐ.நா

இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதல் பகுதிகளில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் வரதராஜா, சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் பராட்டப்பட வேண்டியவர்கள், கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் என ஐ.நா மன்ற இலங்கை அதிகாரி கோர்டன் வெயிஸ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்

இம் மருத்துவர்கள் இந்த கடினமான மாதங்களில் அப்பகுதியில் மருத்துவ சேவைகளை தன்னந்தனியாக நடத்தும் பொறுப்பை சுமந்தார்கள். மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை நிலவிய சூழலிலும், பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டு காயமடைந்த சூழலிலும் அவர்கள் தங்கள் பணியை தங்களால் முடிந்த மட்டில் செய்தார்கள். எனவே ஐ.நா மன்றம் அவர்களுக்கு அமைதி பரிசு தர சிபாரிசு செய்திருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment