அநாதரவான சிறுவர்களுக்கு சிறுவர் இல்லம்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த வந்த அநாதரவான சிறுவர்களில் 100 பேருக்கு வவுனியா வைரவப்புளியங்குளதத்தில் ஜனாதபதியின் பாரியார் திருமதி சிராந்தி ராஜபக்ஷவினால் சிறுவர் இல்லம் வைரவபுளியங்குளம் வைரவர் கோவிலுக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ‘சிறிலிய செவன’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சிறுவர் இல்லத்தின் திறப்பு விழா வைபவத்தில் கைத்தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் குமார வெல்கம பெண்கள், சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உட்பட கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த பல முக்கியஸ்தர்களும் வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இடம்பெயர்ந்தோருக்கான அதிகாரம் வாய்ந்த அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வவுனியா அரசாங்க அதிபர், வவுனியா பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். இந்தப் புதிய சிறுவர் இல்லம் வவுனியா பிதேச செயலாளரின் பொறுப்பில் விடப்பட்டு, சிறுவர்களுக்கான உணவும் பிரதேச செயலகத்தினால் வழங்குவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment