13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக அரசியல் திட்டம் - லக்ஷ்மன் யாப்பா
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைவாக அரசாங்கம் மிகவிரைவில் அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க விருப்பதாகவும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையை ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டுவிட்டதாகவும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அவசியமற்றதெனவும் அதிகாரப் பரவலாக்கம் தேவையில்லையெனவும் கூறுவோர் எதற்காக மாகாண சபைகளில் போட்டியிட்டு பிரதிநிதிகளாக வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் குப்பைக் கூடைக்குள் போடவேண்டுமென தெரிவிக்கின்றனர். அரசியல் ஞானமற்றவர்களின் கருத்தாகவே இதனைக் கொள்ள வேண்டியுள்ளது என்றார். பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கும் போது ஏன் அதனைக் குப்பைக் கூடைக்குள் போட வேண்டும்? என்றார்.
No comments:
Post a Comment