18 June 2009

முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாகப் பேச்சுவார்த்தை

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கையிலுள்ள முக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் இடம் பெயர்;க்கப்பட்ட மக்களுக்கான காதி நீதிபதியும் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி ஜம்இய்யதுல் உலமா தலைவரும் மக்கள் பணிமனைத் தலைவருமான மௌலவி பி.ஏ.எஸ். சுபியான் தலைமையிலான தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தைகளில்; ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது இச் சந்திப்புகளில் அவுஸ்திரேலிய தூதுவர் கதி குலக்மன், ஐரோப்பிய யூனியன் தூதுவர் பேர்ணாட் ஸேரவேஜ், ஈரான் தூதுவர் முஹம்மத் காஷிமி கொரிஜி, மலேசிய தூதுவர் ரொஸ்லி இஸ்மாயில், கனேடியத் தூதுவராலய அபிவிருத்தி ஆலோசகர் சார்ள்ஸ் பார்கர், இந்திய உயர்ஸ்தானிகரின் அரசியல் செயலாளர் சாம், இத்தாலிய உயர்ஸ்தானிகர் செயலாளர் லுகா பிராடிசெல்லி ஆகியோர்களுடன் தூதுவராலயத்தில் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment