13ஆவது திருத்தச் சட்டத்தினை இலகுவில் நீக்கிவிட முடியாது
சில அரசியல் கட்சிகள் கூறுவதுபோன்று அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இலகுவில் நீக்கிவிட முடியாது.அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டதுடன் அரசியலமைப்பில் இடம்பெறுகின்ற விடயமாகும். அது நீதிமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற சட்டமூலமாகவுள்ளது. அதனை நீக்கவேண்டுமாயின் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்படவேண்டும். என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மாகாண சபை முறைமையை எதிர்க்கும் மக்கள் விடுதலை முன்னணி ஏன் அந்த தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது? அப்படியானால் மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்கள் இராஜினாமா செய்துவிட்டு வந்து எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்.
13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் அதேவேளை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மூலம் முன்வைக்கப்படுகின்ற யோசனையின் பிரகாரம் தேசிய இணக்கப்பாட்டை எட்டி அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடவேண்டும். இதுவே ஜனாதிபதியின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் கூறினார். ஊடகத்துறை அமைச்சில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
நன்றி- வீரகேசரி
No comments:
Post a Comment