சாக்கிரதை, சாக்கிரதை, தொப்பி மாத்திகள் ஜாக்கிரதை.
- யஹியா வாஸித்
முதல்தான் எதுக்கெடுத்தாலும் சோனி தொப்பி மாத்திட்டான்டா, சோனி தொப்பி மாத்திட்டான் என்பார்கள். இப்ப என்னடா என்றால் எல்லோருமே தொப்பி மாத்த தொடங்கி விட்டார்கள். அதுவும் நம்மட ராஜாதி ராஜ, ராஜ குலோத்துங்க, ராஜ கம்பீர, உலக மகா சூரர்களும் தொப்பி மாத்த தொடங்கி விட்டார்கள். நம்ம எம்பி கிஷோர் சாகேப் தொப்பி மாத்திட்டாராம், குதிரை கஜேந்திரன் அண்ணா எப்படி மாத்துவதென தெரியாம தொப்பியை கழட்டி வைத்துள்ளாராம், தோழர் சுரேஸ் ஹி..ஹி..ஹி...ஓல் றெடி டண் என்றுதான் சொல்கின்றார்கள், கியூசிக்கள், ட்ரயல் அட் பார் பரம்பரையில் வந்த மற்றவர்களும், அது, வந்து நாங்க புலி சொன்னதற்காகத்தான் இவ்வளவும் செய்தோம் என முந்தா நாள் பத்திரிகை ஒன்றில் தொப்பி மாற்றியுள்ளார்கள். மாவை சேனாதிராசாண்ணா கடல்கடந்த தமிழீழமா, எங்களுக்கு யாரும் சொல்லலையே என தொப்பி மாத்தியுள்ளார். பொட்டண்ணா ஏசீ றூமில் சகல சௌகரியங்களுடனும் இருந்து கொண்டு நிமிடத்திற்கொருதரம், தொப்பி மாற்றுவதாக, நம்பத் தகுந்த கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் குசு குசுக்கின்றன.
No comments:
Post a Comment