18 June 2009

ஆளுநர் தலைமையிலான குழுவினர் குடாநாட்டுக்கு விஜயம்

வடக்கு மாகாண ஆளுநர் டிக்சன் சரத்சந்திரதேவ தலைமையிலான குழு 17-06-2009ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. இக் குழுவில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், வடக்கு மாகாண சபை அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி சபையின் அதிகாரிகளும் அடங்குவர்.யாழ் மாவட்டச் செயலகத்தில் நடத்திய கலந்துரையாடலில் யாழ். அரச அதிபர் கே.கணேஷ், வடமாகாணத்தின் யாழ்.பிராந்திய ஆணையாளர் திருமதி பொ.சிவலிங்கம் ஆகியோரும் அனைத்துப் பிரதேச செயலர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்களும் பங்குபற்றினர். இங்கு உள்ளூராட்சி சபைகளின் மறுசீரமைப்பு, திணைக்களத் தலைவர்களின் பங்கு மற்றும் மக்களை இந்தச் செயற்பாடுகளில் எவ்வாறு பங்குபற்றச் செய்வது என்பன போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment