ஒரு மாதத்தில் முதியவர் இல்லத்தில் ஒரு 25 பேர் மரணம்
வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களிலுள்ள முதியோர் 157 பேர் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் முதியோர் இல்லத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 25 பேர் ஒரு மாத காலத்தில் மரணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எஞ்சிய 130 பேரில் 76 பேர் ஆண்கள் என்றும் 54 பேர் பெண்கள் என்றும் கோவில்குளம் சிவன்கோவில் அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 29 பேர் படுத்தபடுக்கையாக இருப்பதாகவும், இவர்கள் தொண்டர்கள் மற்றும் பணியாளர்களின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்காலிக பாடசாலை கட்டிடத்தில் இயங்கும் இந்த இல்லம் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் கோவிலுக்குச் சொந்தமான காணியில் சகல வசதிகளுடனும் கூடியதாகப் புதிய முதியவர் இல்லம் அமைக்கப்பட்டு வருவதாக அறங்காவலர் சபையின் செயலாளர் ஆறுமுகம் நவரட்னராஜா தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment