20 June 2009

மக்கள் சுதந்திரமாக நடமாட அரசு அனுமதிக்க வேண்டும் : ஜோன் ஹோம்ஸ்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது முகாம்களில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அவசர மனிதாபிமான விவகார இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் பணியாற்ற தொண்டு நிறுவனங்களுக்கு தற்போது அதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜோன் ஹோம்ஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைநாட்டுவது குறித்து அரசாங்கம் அதிக முனைப்பு காட்ட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். எனினும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமையினை ஏற்றுக் கொள்ள முடியாதென குறிப்பிட்டார்

No comments:

Post a Comment