78 குடும்பங்கள் மீள்குடியேற்றம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்திருந்த பெரிய புல்லுமலை மற்றும் வெலிக்காகண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 78 குடும்பங்கள் (174 பேர்) மீள்குடியேற்றத்திற்காகத் தமது சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர்.செங்காவடி - பதுளை வீதியிலுள்ள ஏனைய கிராமங்களில் மீள்குடியேற்றப் பணிகள் ஏற்கனவே ப+ர்த்தியடைந்துள்ளன. எனினும் இக்கிராமங்களைச் சேர்ந்த 165 குடும்பங்கள் (534 பேர்) இதுவரை உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் சவுக்கடி முகாமிலும் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் சவுக்கடி முகாமில் தங்கியிருந்த 91 குடும்பங்கள், தாம் தற்போது திரும்பக்கூடிய சூழ்நிலையில் இல்லை என்று மறுப்பு தெரிவித்த்ததாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment