தற்காலிக எல்லை கிராமங்கள் மீண்டும் மட்டு. மாவட்டத்தின் கீழ்
1990 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்துடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்கள் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகத்தின் கீழுள்ள புளுக்கன்னாவை, கெவிலியாமடு ஆகிய கிராமங்களும் செங்கலடி பிரதேச செயலகத்தின் கீழுள்ள மங்களகம் மற்றும் கொஸ்கொல்ல ஆகிய கிராமங்களே மேற்படி கிராமங்களாகும். சிங்கள மக்கள் வாழும் இக் கிராமங்களில் சுமார் 2500 பேர் வரை வசித்து வருகின்றனர்.கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட முன்பு இக் கிராமங்களை அண்டிய பிரதேசங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தமையினால் மட்டக்களப்பு நகருக்கு நேரடியாக தமது அலுவலகளின் நிமித்தம் இக் கிராம மக்கள் வர முடியாத நிலை இருந்தது.வர்த்தமானி அறிவித்தலொன்றின்படி தற்காலிகமாக இக் கிராமங்கள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, இவர்களுக்கான சிவில் நிர்வாக அலுவல்களும் நிவாரண உதவிகளும் அம்பாறை கச்சேரி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது.ஆனால் தேர்தல் இடாப்பில் இக் கிராம வாக்காளர்கள் மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இக் கிராமங்கள் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர சகல திணைக்கள தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment