13 வது திருத்தச் சட்டமூலம் - மக்கள் அனுமதிபெற சர்வஜன வாக்கெடுப்பு
மக்களின் அனுமதியின்றி 13வது திருத்தச் சட்ட மூலத்தை மாற்ற முடியாது. தற்பொழுதுள்ள யாப்பை திருத்துவதானால் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே திருத்தம் செய்யப்படுமென ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் அரசியல் தீர்வு யோசனை தொடர்பாக கட்சிகளிடையே பூரண இணக்கப்பாடு ஏற்பட்ட பின் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் பின் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அனுமதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 13வது திருத்தச் சட்டம் குறித்து மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதோடு நீதிமன்றத்தின் அனுமதியும் பெறப்பட்டது. 13வது திருத்தம் அரசியல் யாப்பிற்கு முரணானதல்ல என நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன் பின்னரே 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபை முறை அமுல்படுத்தப்பட்டது. இது குறித்து ஜனாதிபதி தேசிய இணக்கப்பாடொன்று எட்டியதும் மக்களின் அனுமதியை பெற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களுக்குத் தெர்pயாமல் மறைமுகமாக அரசாங்கம் எதனையும் அமுல்படுத்தாது. நடைமுறையில் உள்ள சட்டத்தை மீறி ஜனாதிபதியினால் செயற்பட முடியாது. சர்வகட்சிக் குழுவின் யோசனை தொடர்பாக அரசாங்கத்திலுள்ள கூட்டுக் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் காணப்படலாம். ஆனால் தீர்வு யோசனை தொடர்;பாக இதுவரை கூட்டுக் கட்சிகளுடன் ஆராயப்படவோ இணக்கப்பாடு எட்டப்படவோ இல்லை. தீர்வு யோசனை வெளியானதும் அது குறித்து கூட்டுக் கட்சிகளுடன் பேசி இணக்கம் காணப்படும்.
No comments:
Post a Comment