மனித நேயத்தின் விளைநிலமே!…. பத்மநாபா-தோழர் ஜேம்ஸ்
SG தோழர் என எல்லோராலும் அறியப்பட்ட, அழைக்கப்பட்ட தோழர் நாபாவின் 19 நினைவு தினம் இன்று. பாசிச புலிகளினால் தமிழ் நாட்டின் சென்னையில் வைத்து கோழைத்தனமாக கொல்லப்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் நகர்ந்து சென்று விட்டன. நாபா தோழர் விட்டுச்சென்ற மக்களுக்கான பணிகளை உங்கள் சிந்தனைகளின் அடிப்படையில் எடுத்து சென்ற பல தோழர்கள் இன்று எம்மோடு இல்லை. அவர்களும் புலிகளினால் பலி எடுக்கப்பட்டு விட்டார்கள். உங்களை நேசித்த ஒரு காரணத்திற்காக பல ஆயிரம் பொது மக்களும் புலிகளின் வதை முகாங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதையின் பின் கொல்லப்பட்டு விட்டார்கள். தோழர் றொபேட் எம்மோடு இல்லை. தோழர் ஐயா இல்லை. தோழர் சாமி இல்லை. இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் நீங்கள் எம்மிடம் விட்டுச் சென்ற மக்கள் பணி மட்டும் எங்களிடம் மிஞ்சி இருக்கின்றது. எங்களிடம் பணம் இல்லை. வளங்கள் இல்லை. வசதிகள் இல்லை. ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு நகர வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் மக்களின் விடிவிற்கான நல் கொள்கைகள் உள்ளன. வேலைத்திட்டங்கள் உள்ளன. தோழர் சுகு இருக்கின்றார். தோழர் மோகன் இருக்கின்றார். தோழர் இரத்தினம் இருக்கின்றார். இன்னும் ‘முகம் அறியாத’ பல ஆதரவாளர்கள் இருக்கின்றனர். எல்லோருக்கும் நல்ல ஆலோசனை வழங்க நல்ல ஆசான் தோழர் வரதர் இருக்கின்றார்.
No comments:
Post a Comment