மன்னார் கடற் பிரதேசத்தில் மீன்பிடித்தடை முற்றாக நீக்கம்
மன்னார் கடற் பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் யாவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஆலோசனையின் பிரகாரம் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தலைமன்னார் கடற்படை இறங்குதுறையில் வைத்து மன்னார் மீனார்களை சந்தித்தபோது தெரிவித்தார்.இவ்வாறே கிழக்கு கடலில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 14 ஆம் திகதியும் யாழ். குடா மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 19 ஆம் திகதி நீக்கப்பட்டது.மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களில் 60 வீதமானவர்கள் 63 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 000 பேர் இவ்வாறு மீன் பிடித்துறையில் ஈடுபட்டுள்ளனா
இதுவரை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மீனவர்களின் கோரிக்கைக்கிணங்க 7 நாட்களும் மீன்பிடிக்க அனுமதியும் மீன்பிடிப் படகு இயந்திரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டு. 15 குதிரை வலு கொண்ட படகு இயந்திரங்களை பாவிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆழ்கடல் மீன்பிடிக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது. இது தவிர மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள், மீன்பிடி உபகரணங்கள் வழங்குவதற்காக 275 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அத்தோடு ஓய்வு அறைகள், குளிரூட்டப்பட்ட அறைகள் அமைக்கவும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 180 நாள் திட்டத்தினூடாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment