29 June 2009

சாத்தான்களின் வேதம்!

சதாசிவம். ஜீ.

‘சட்டி, பானையைப் பார்த்துச் சொல்லிச்சாம் “நீ கறுப்பு” என்று’ அதுபோலத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி தேர்தல் ‘பொய்யான’ தேர்தல் என்றும் இத்தேர்தல் சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு தந்திரம் என்றும் கூறுகிறது. அதுவும் யார் கூறியிருக்கிறார் என்றால் சுரேஸ் பிரேமச்சந்திரன். இவரைப்பற்றி தமிழ் மக்கள் நன்கு அறிந்துவைத்துள்ளார்கள் என்பது பரமரகசியம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிகளின் அனுக்கிரகத்தினாலும் புலிகளின் முழுமையான கள்ளவோட்டினாலும் இவரும் இவருடன் சேர்த்து 22 திருடர்களும் பாராளுமன்றம் புகுந்தார்கள். இவர்களின் ‘அலிபாபா’ இந்த 22 திருடர்களையும் அந்தரிக்கவிட்டுவிட்டு நரகத்துக்குள் புகுந்துவிட்டார். யாழ்ப்பாணத்தில் நடக்கும் தேர்தல் “சுதந்திரமாக நடைபெறுமா?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் சுரேஸ். மேலும் மனிதப் பேரவலத்தின் விளைவு, மக்களின் நீண்டகால போருக்கான தீர்வு, யாழ். மாநகரசபையை மீளக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை நாங்கள் முதன்மைக் கோஷமாக முன்வைத்திருப்பதாகவும் அருளியிருக்கிறார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நடந்த பத்திரிகை எரிப்புச் சம்பவத்துக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டமென மாவை சேனாதிராஜா கூறியிருக்கிறார். இலங்கையில், ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இதைவிட மோசமான நிலை காணப்படுவதை நாங்கள் அறிவோம். ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் மேலும் அவர் சொல்லியிருக்கிறார்.

http://www.sooddram.com/Articles/Sathasivam/June282009_P.htm

No comments:

Post a Comment