26 June 2009

பத்திரிகைகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கிறது.

யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளான தினக்குரலி உதயன் வலம்புரி ஆகிய பத்திரிகைகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சம்பவங்கள் வன்முறைக் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் நம்பிக்கைகளை சிதறடிக்கச் செய்யும்.

கருத்துகளில் எப்போதும் ஐனநாயகம் நிலவ வேண்டும். பன்முகத்தன்மை ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும். பொதுவாக உருவாகிவரும் ஐனநாயக சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.

வேறுபட்ட சமூக சாதகமான அபிப்பிராயங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். நூறு கருத்துகள் மலர்வதும் முட்டி மோதுவதுமே சமூகத்தில் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். கருத்து சுதந்திரத்திற்கு அடிநாதமாக இருப்பது பத்திரிகைச் சுதந்திரம் அது பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையேல் மக்கள் மௌனமாகி விடுவார்கள. மக்கள் மனங்களிலிருந்து பீதி நிலையை நீக்க வேண்டும் அதற்கான சூழ்நிலை உருவாக்கப் படவேண்டும்.
கருத்துக்களிலும் வன்முறை களையப்பட வேண்டும்.

எமது சமூகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய கருத்து வன்முறையே பல அழிவுகளுக்கு இட்டுச் சென்றதென்பதை மனதிலிருத்தி ஆகவேண்டும்.

கண்ணியமானதொரு கருத்து சுதந்திர பண்பாடு எமது சமூகத்தில் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அதற்கான சூழ்நிலை உருவாகிவரும் வேளையில் நம்பிக்கைளை தளர்வடைச் செய்யும் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்.இயல்பு நிலையை ஜனநாயக சூழலை உருவாக்கவும்இ பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது அவசியம். உள்நோக்கமில்லாது உண்மையாக செயற்படும் அனைவருடனும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கரம்கோர்த்துக் கொள்ளும்

No comments:

Post a Comment