மீள்குடியமர்த்தும் பணிகள் சீராக இல்லை : ப.சிதம்பரம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகளை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தமிழகத்தின் காரைக்குடியில் இடம்பெற்ற நிகழ்வவொன்றில் பேசும் போது தெரிவித்ததாக பி.ரி.ஐ செய்தி தெரிவிக்கின்றது
மேலும் நிவாரணப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாக வழங்குவதற்கு அனுமதிக்கவும், முகாம்களுக்குச் செல்ல ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்தியா 500 மில்லியன் ரூபா வரை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இந்த நிதி பயன்படுத்தப்படும் முறை குறித்து இலங்கையிடம் எந்தவிதத் திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசிடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் தமிழர் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தி வந்த போதிலும் இரு தரப்பினரும் அதனை உதாசீனம் செய்தாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment