18 August 2009

தபால்மூல வாக்களிப்பு விண்ணப்ப காலக்கெடு நீடிப்பு

எதிர்வரும் தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த காலக்கெடு 11 நாட்களால் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென் மாகாண சபைத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்ட அரசாங்க ஊழியர்கள், பொலிஸார் மற்றும் முப்படையினர்களுக்குத் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கு 17 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment