18 August 2009

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் : யாழ். ஆயர்

வன்னியில் மோதல்களால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படாது உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மடு மாதா ஆலய திருவிழாவின் போது தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் அம் மக்கள் அவலங்கள் மறக்கப்பட்டு கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற விசாரணைகளை மேற்கொள்வதாக அரசு தெரிவிக்கிறது. மடுமாதா திருவிழாவில் அதிகமான யாத்திரிகர்கள் கலந்து கொண்ட போதும், வடக்கின் பொதுமக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து திருவிழாவுக்கு வந்த தமிழர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தாக கொழும்பு பேராயர் ரஞ்சித் மெல்கம் தெரிவித்தார். முகாமில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கா விட்டால், விழாவுக்கு வருகை தந்த தமிழர்களின் எண்ணிகை மேலும் அதிகரித்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment