சமாதான செயலகப் பணிகள் நிறைவு
இலங்கை சமாதான செயலகத்தின் பணிகள் நேற்று 31 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரையின் பேரில் சமாதான செயலகம் தனது பணிகளை நிறைவு செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்றுக் கொள்ளப்பட்ட இராணுவ வெற்றியைத் தொடர்ந்து சமாதான செயலகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக செயலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சமாதான செயலகப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய நபர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment