4,000 பேர் 64 பஸ்களில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்புவவுனியா நிவாரண கிராமங்களிலும் வேறு நலன்புரி நிலையங்களிலும் தங்கி இருந்தவர்கள் சுமார் 4,000 பேர் வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டு 64 பஸ் வண் டிகளில் 05-08-2009 சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந் நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்றுக் காலை 10.00 மணிக்கு வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் நடைபெற்றது. இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றது. இதில் கந்தளாயைச் சேர்ந்த 189 குடும்பங்கள்- 464 பேர், திருகோணமலை- 33 குடும்பங்கள்- 93 பேர், அம்பாறை-56 குடும்பங்கள்- 142 பேர்;, மட்டக்களப்பு- 109 குடும்பங்கள்- 265 பேர்களுமாக மொத்தம் 387 குடும்பங்களைச் சேர்ந்த 964 பேர் கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேநேரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 52 குடும்பங்களின் 130 பேர் அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பல்வேறு காரணங்களுக்காக வன்னிக்குச் சென்று சிக்குப்பட்டவர்களும், கிழக்கிலிருந்து சென்று வன்னியில் வாழ்ந்து இடம்பெயர்ந்தவர்களும் அடங்குவர்.
No comments:
Post a Comment