புனித மடு தேவாலய வருடாந்த திருவிழாபுனித மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இம்முறைத் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிந்த பின்னர் நடத்தப்படும் முதலாவது மடுத் திருவிழா இதுவாகும். இன்று ஆரம்பமாகும் மடுத்திருவிழா தொடர்ந்து 16ஆந் திகதி வரை நடைபெறும். இன்றைய முதலாவது வழிபாடு முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்றது. மற்றுமொரு வழிபாடு மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.வழமைபோன்று சகல வழிபாடுகளுடன் திருவிழா நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக ஆலய பரிபாலகர் அருட்திரு. ப்ரெட்டி டெஸ்மன் க்ளார்க் தெரிவித்துள்ளார். மடுத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க பொலிஸார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் யாத்திரிகர்கள் எவரும் ஆலயத்தில் எதிர்வரும் 11ஆந்திகதி வரை தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் 12ஆந் திகதி முதல் திருவிழா நிறைவுறும் வரை யாத்திரிகர்கள் ஆலயத்தில் தங்கயிருக்க அனுமதிக்கப்படுவர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment