05 August 2009

480 கிலோ வெடிமருந்து ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கையின் போது 480 கிலோ நிறையுள்ள அதி சக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ஒவ்வொன்றும் 10 கிலோ எடையுள்ள அதி சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-10, 5 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-76, சிறிய ரக கிளேமோர் குண்டுகள்- 20, ரி-56 துப்பாக்கி ரவைகள்-300, படகுகளுக்கு பொருத்தப்படும் வெளி இணைப்பு இயந்திரம்-01 மற்றும் பல்வேறு ஆயுதங்களும் வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment