சோதனைச் சாவடியூடாக லொறிகள் நேரடியாக செல்ல அனுமதி
தம்புள்ள, கொழும்பு மற்றும் தென்பகுதிகளில் இருந்து ஏ-9 வீதி ஊடாக வவுனியாவுக்கும் மன்னாருக்கும் செல்லும் லொறிகள் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகக் கடந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது
வவுனியாவுக்கும், மன்னாருக்கும் மரக்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள், விற்பனைக்குரிய பொருட்கள் என்பனவற்றை ஏற்றிச் செல்லும் லொறிகளுக்கே இவ்வாறு பிரயாண அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதவாச்சி சோதனைச் சாவடியுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மதவாச்சியில் லொறிகளில் இருந்து பொருட்களை இறக்கி சோதனையிட்டு, பின்னர் ஏற்றும் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது. சோதனை எதுவுமின்றி, வாகனப் பதிவுகளை மட்டும் பார்வையிட்டு வவுனியா, மன்னார் பகுதிகளுக்குச் செல்வதற்கு லொறிகள் இப்போது அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment