கூமாங்குளத்தில் 366 கிலோ வெடிமருந்து மீட்பு- சந்தேகநபர் கைது
வவுனியா, கூமாங்குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 366 கிலோ எடையுள்ள சி-4 ரக அதி சக்திவாய்ந்த வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து நிவாரணக் கிராமம்-04 இல் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க சந்தேக நபரான விஜயன் என அழைக்கப்படும் கந்தையா விஜயகுமார்(35) என்பவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே வெடிமருந்துகள் மீட்டக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் மற்றுமொரு சந்தேக நபரான கரன் என அழைக்கப்படும் தர்மலிங்கம் சிவகரன்(24) என்பவர் வவுனியா பூந்தோட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment