04 August 2009

முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு விஷேட பொலிஸ் பதிவு

வவுனியா தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளவர்களை கணக்கெடுப்பதற்காக பொலிஸ் பதிவொன்றை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால்லெவகே தெரிவித்துள்ளார்.

மேலும் முகாம்களுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை, நோய்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, அங்கிருந்து விடுவிக்கப்பட்டோர் தொகை மற்றும் தற்போது முகாம்களில் எஞ்சியுள்ளவர்களின் எண்ணிக்கை என்ற அடிப்படையிலேயே பதிவு மேற்கொள்ளப்பட்டு கணக்கெடுக்கப்படும் என்றார் முகாம்களில் இருந்து பலர் இரகசியமான முறையில் தப்பிச் சென்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். சுமார் 5000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கு தீர்வு காணும் பொருட்டே பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடனும், வவுனியா மாவட்ட செயலாளரின் ஒத்துழைப்புடன் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்தார்

No comments:

Post a Comment