அகதிகளின் புனர்வாழ்வுக்கு அதிக அளவு நிதி தேவை- கோத்தபாய
வன்னியிலிருந்து அகதிகளாக வவுனியா முகாம்களில் வாழும் மக்களின் புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசுக்கு அதிகளவு நிதி தேவைப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பி.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவிருக்கின்ற 260 கோடி ரூபா கடன், புனர்வாழ்வு, அபிவிருத்திப் பணிகளுக்குப் போதாது என்றும், அகதிகளின் மீள் கட்டுமானப் பணிகளுக்கு நிதிப்பற்றாக்குறை பெரும் தடங்கலாக இருப்பதாகவும் தெரிவித்தார். நாம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா, யப்பான் போன்ற உதவி வழங்கும் சர்வதேச நாடுகள் ஆகியவற்றிடமிருந்து மேலும் நிதியை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்
No comments:
Post a Comment