புலிகள் பெருந்தொகை நவீன ஆயுதங்கள் பெற்ற விபரம் கே.பி.யை கைதுசெய்ததன் மூலம் அம்பலமாக்க முடியும் - ஜனாதிபதி
கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளமை இலங்கைக்கு மிகவும் முக்கியமான விடயம் என்றும் இதன்மூலம் விடுதலைப்புலிகள் வெளிநாடுகளிலிருந்து பெருந்தொகை நவீன ஆயுதங்களை எவ்வாறு பெற்றுக்கொண்டனர் என்பதை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய தொலைக்காட்சி “நியூஸ் எக்ஸ்” இற்கு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச ரீதியாக நிதி கிடைப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச சமூகம் இப்போது இலங்கைக்கு உதவுவது அவசியம் என்றார்.
எவ்வாறு புலிகள் பெருந்தொகை நவீன ஆயுதங்களை பெற்றனர் என்பது தொடர்பான விபரத்தை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி பயங்கரவாதம் இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல. முழு உலகிற்குமான பிரச்சினை இதுவாகும்.
பயங்கரவாதம் பற்றி கதைக்கின்ற இந்த சகல நாடுகளும் இதனை நிறுத்த முன்வர வேண்டும்.
அதேசமயம், இலங்கை விவகாரத்திற்கான தீர்வு உள்நாட்டிலேயே ஏற்படுத்தப்பட்ட தொன்றாக இருக்க வேண்டும் ஏனைய நாடுகளில் காணப்பட்ட தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வாக இருக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். சிறுபான்மையினருடனும் மாகாணங்களுடனும் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள புதிய சபையை அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என்றார்.
No comments:
Post a Comment