தென் மாகாணசபைக்கான தேர்தல் வேட்பு மனு
எதிர்வரும் தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வேட்பு மனுக்களை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்யலாம். தென் மாகாணத்தில் 17,61,843 வாக்காளர்கள் உள்ளனர். காலி மாவட்டம்- 7,68,801 வாக்காளர்கள், மாத்தறை மாவட்டம்- 5,78,856 வாக்காளர்கள், அம்பாந்தோட்டை மாவட்டம்- 4,21,156 வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment