13 August 2009

அச்சமற்ற சூழ்நிலையை உருவாக்க நடவடிக்கை

வடக்கில் அரசு முன்னெடுக்கின்ற அபிவிருத்திகளை மக்கள் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டுமாயின் யாழ்ப்பாணத்தில் அச்சமில்லாத சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியிடம் யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். யாழ்.குடாநாட்டில் களவு, கொள்ளைகள், சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி இவற்றைத் தடுப்பதன் மூலமே மக்கள் அமைதியாக வாழ முடியுமென்பதுடன் நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு குடாநாட்டில் பொலிஸாரின் எண்ணிக்கை போதாமலிருக்கின்றது. இதனால் இராணுவம் அல்லது கடற்படையினரின் உதவியுடன் கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக பொறுப்பு வாய்ந்த விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment