13 August 2009

ஜனாதிபதி, பொதுத் தேர்தல்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்படும் - யாப்பா

ஜனாதிபதியைத் தெரிவுசெய்தல் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்தி முடிக்கப்படும். தென் மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் பகுதி பகுதியான தேர்தல்கள் நடைபெறாது. எனவே, மிகப்பெரிய இரண்டு தேர்தல்களுக்குத் தயாராகுமாறும் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் 18 வீதமானோரே வாக்களித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது. ஆனால் வாக்களித்த 18 வீதத்தில் 50 வீதத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக்கொண்டுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய கட்சி வெறும் 83 வாக்குகளையே பெற்றுக்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் கூறியதாவது

மேலும் முழு விபரம் http://www.theneeweb.de/html/130809-3.html

No comments:

Post a Comment