14 August 2009

புலிகளின் உலக வலையமைப்பின் முக்கிய தகவல்கள் அம்பலம்: பாதுகாப்பு செயலாளர்

நீண்டகாலமாக அரும்பாடுபட்டு பொருத்தமான பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டதாலேயே கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி (சிங்கள ஒலிபரப்பு) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனைக் கூறினார். நாட்டின் புலனாய்வுத் துறை உட்பட பாதுகாப்புப் படையினர் பத்மநாதன் பற்றிய தகவல்களை ஏற்கனவே அறிந்திருந்தனர் எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,புலிகளின் தலைவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அந்த அமைப்பின் சர்வதேச பலத்தை ஒழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு இருந்தது. கே.பி.யை விசாரணை செய்வதன் மூலம் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் முக்கியமான தகவல்களைப் பெறமுடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முழு விபரம் http://www.thenee.com/html/140809-3.html

No comments:

Post a Comment