14 August 2009

பொலிஸ் அத்தியட்சகர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது

கம்பஹா பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்ட எஸ்.பி.லக்ஷ்மன் குரே பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தப்பட் டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே கம்பஹா பொலிஸ் பிரிவில் கடமைகளை பொறுப்பேற்க முன்னர் யாழ்ப்பாணம் பிரிவு மூன்றின் உத விப் பொலிஸ் அத்தியட்சகராகவும் கடமை புரிந்துள்ளார்.

No comments:

Post a Comment