பதுளையில் கிளைமோர் குண்டுகள் மீட்பு
பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் ஹெலிகொப்டர் தரை இறங்கும் இடத்தில் புதைக்கப்பட்டும் மற்றைய கிளேமோர் குண்டு மஹியங்கனை வழியில் நான்காவது மைல் கல்;லருகே மரமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதி சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகளை கொழும்பிலிருந்து பதுளைக்குச் சென்ற விசேட குற்றப்புலனாய்வுத்துறை பொலிசாரால் மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்திற்கு பதுளை வரும் போது ஜனாதிபதி வரும் ஹெலிகொப்டர் தரை இறங்கியதும் வெடிக்கும் வகையிலேயே இவைகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகளின் முக்கியஸ்தர் வழங்கிய தகவலொன்றின் அடிப்படையிலேயே இவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment