இடம்பெயர்ந்தவர்களுக்கு சட்ட ஆவணங்கள்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சட்ட ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்க அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விசேட திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும், அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சும் இணைந்து 'நீதி நியாயத்தைச் சமமாக அணுகும் கருத் திட்டம்” என்ற தொனிப்பொருளில் இதனை முன்னெடுக்கவுள்ளதாகச் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இத்திட்டத்தின் முதலாவது கட்டம் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2008இல் முடிவடைந்தது. இரண்டாவது கட்டம் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2012இல் இக்கருத்திட்டம் நிறைவடையும். யு. என். டி. பி. இன் நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் கீழ் தேசிய அடையாள அட்டைகள், பிறப்பு, திருமண இறப்பு சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சட்ட ஆவணங்களை உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
No comments:
Post a Comment