மழையால் வவுனியா முகாம் மக்கள் பெரும் சிரமம்வவுனியாவில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழை காரணமாக, இடைத்தங்கல் முகாம்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் அதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் சில முகாம்கள் மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதால் மழையை தாக்குப் பிடிக்க முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மழையால் பாதிப்புக்குள்ளாகும் மக்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தங்களை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிகிறது.
No comments:
Post a Comment