மட்டக்களப்பில் தமிழக வியாபாரிகள் கைது
மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் தங்கியிருந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 வியாபாரிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுற்றுலா பயண விசா பெற்று நாட்டுக்குள் பிரவேசித்து வியாபாரத்தில் ஈடுபட்டதாக இக்கைது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கருப்பையா ராமசாமி, மாரியப்பன் ராமகிருஷ்ணன், மாரியப்பன் சின்ன சுப்பையா, சின்னவேல் சுப்பையா, ராமு சுப்பிரமணியம், இராஜகோபால் ஜீவானந்தம் மற்றும் சாந்தப்பன் முருகன் ஆகிய 7 பேரும் நேற்று மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்களிடமிருந்த ஒரு தொகுதி உடுதுணிகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.500 இற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த துணி வியாபாரிகள் வீடுகளிலும், விடுதிகளிலும் தங்கியிருந்து வீடுவீடாக மட்டுமன்றி, காரியாலங்கள் மற்றும் பாடசாலைகள் என பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இவ்வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதால் உள்ளுர் வியாபாரிகளைப் பாதிப்பதாக வர்த்தக சமூகத்தினால் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே. இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment