16 August 2009

தமிழ் மக்களின் பிரதிநிதிகளென கூட்டமைப்பு இனிமேல் உரிமை கோர முடியாது

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் பற்றிப் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்குத் தமிழ் மக்கள் அங்கீகாரம் அளித்திருக்கின்றார்கள் என்பது பொதுவான அபிப்பிராயமாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்த் தேசியப் கூட்டமைப்பு தொடர்பாகத் தமிழ் மக்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி இத் தேர்தலில் பிரதானமானது.2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியது. புலிகள் எதிரணியினரை அச்சுறுத்தி மிரட்டியதும் அவர்களின் முறைகேடுகளுமே கூட்டமைப்பின் வெற்றிக்குக் காரணம் என்று பரவலான குற்றச்சாட்டு அந்த நேரத்தில் முன்வைக்கப்பட்ட போது கூட்டமைப்பினர் அதை வலுவாக மறுத்தனர். மக்களின் ஆதரவு தங்களுக்கு அபரிமிதமாக இருக்கின்றது என்றும் எவ்விதமான நிர்ப்பந்தமும் இல்லாமல் மக்கள் சுயமாகவே தங்களுக்கு வாக்களித்தார்கள் என்றும் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறினார்கள். அவர்களின் அக் கூற்றை உரைத்துப் பார்ப்பதற்கான சந்தர்ப்பமாகவே இவ்விரு தேர்தல்களும் அமைந்தன.பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட நாளிலிருந்து கூட்டமைப்புத் தலைவர்கள் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுப் புலிகளின் பதிலிகளாகச் செயற்பட்டார்கள். தனிநாட்டு இலக்குடன் செயற்பட்ட காரணத்தால் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு இவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

முழுமை http://www.sooddram.com/Articles/otherbooks/Aug2009/Aug162009_Thinkaran.htm

No comments:

Post a Comment