புலிகளை ஊக்கப்படுத்தியவர்களும் சரணடையவேண்டும்!
சதாசிவம். ஜீ.
கொழும்பிலுள்ள புலிகள் சரணடைவதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்குவது தொடர்பாக ஆலோசித்துவருகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொழும்பிலுள்ள புலிகள் மற்றும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் சரணடைந்து செய்த பாவங்களை கழுவிக்கொள்ளவது நல்லது. இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறிய பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான பகுதியை புலிகள் தமது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தனர். பிரேமதாசா அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்ளக்கூடியவற்றைப் பெற்றுக்கொண்டு பிரேமதாசாவின் கழுத்தை அறுத்தார்கள். மீண்டும் யுத்தம். இதன் பின்னர் என்றுமில்லாதவாறு புலிகளின் பின்னால் ‘ஒரு கூட்டம்’ திரண்டது. யுத்தம் புரிவதற்கல்ல, புலிகளின் வன்முறையை நியாயப்படுத்துவதற்கும் அவர்களுடைய வன்முறையை ஊக்கப்படுத்துவதற்கும். இவர்களில் புத்திஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் உட்பட கொழும்பிலிருந்து ‘மாற்று’ என்று தமக்குத் தாமே நாமம் சூட்டிக்கொண்ட பத்திரிகை கூட்டம் ஒன்றும் மேற்படி சொற்படி வித்தையை கட்டவிழ்த்துவிட்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் அன்று தாம் புலிகளில்லை என்று சொல்லிக்கொண்டாலும் பின்னர் புலிகள் என்று தாரளமாகவே அடையாளப்படுத்திக்கொண்டார்கள்.
முழுமை http://www.sooddram.com/Articles/Sathasivam/Aug162009.htm
No comments:
Post a Comment