05 August 2009

வைத்தியசாலையைப் பொறுப்பேற்க கோரிக்கை

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் யுத்தத்தில் காயமடைந்த அப்பாவி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செட்டிக்குளம் வைத்தியாலையின் பணிகளை பொறுப்பேற்ற இந்திய வைத்தியர் குழாம் தனது பணி நிறைவுற்றதையடுத்து மீண்டும் செட்டிக்குளம் வைத்தியசாலையைப் பொறுப்பேற்குமாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்குக் கடிதம் மூலம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 31ஆம் திகதியுடன் குறித்த வைத்தியசாலையின் பணிகளை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.செட்டிக்குளம் வைத்தியசாலையின் மூலம் பெருந்தொகையான அகதிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment