வடபகுதி விவசாயிகள் தமது விளை நிலங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்
வடமாகாணத்தில் செய்கை பண்ணப்படாத அனைத்து விளை நிலங்களையும் விளைச்சல் மிகுந்த பகுதியாக மாற்றுவதற்கான திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். இதனையடுத்து முதற்கட்டமாக யாழ் குடாநாட்டில் வடமராட்சி, தென்மராட்சி உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள விளை நிலங்கள், தரிசு நிலங்கள் தொடர்பான கணக்கெடுப்பொன்றையும்;, கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவியுடன் செய்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தென்மராட்சி பகுதியில் சுமார் 4700 ஏக்கர் விளை நிலம் செய்கை பண்ணப்படாமலுள்ளது என இனங்காணப்பட்டுள்ளது.வடபகுதியிலுள்ள விவசாயிகள் தமது விளை நிலங்கள் குறித்த தகவல்களை யாழ் அரச அதிபரிடம் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்த ஆளுநர் விளை நிலங்களின் உரிமையாளர்களின் பங்களிப்புடனும் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவியுடன் அனைத்து விளை நிலங்களும் செய்கை பண்ணப்படும், உரிமையாளர்கள் அல்லாத காணிகள், தரிசு நிலங்கள் கமநல சேவைகள் திணைக்களத்தினாலேயே செய்கை பண்ணப்படும். வறண்ட பகுதில் செய்கை பண்ணக்கூடிய மரமுந்திரி போன்ற உப பயிர்களையும் வடமராட்சி பகுதியில் செய்கை பண்ணவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment