பத்மநாதனிடம் பதவிக்காக பறந்துபோன பெருச்சாளிகள்.
குசும்பன்.
தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, இருபதினாயிரம் பொது மக்களை பலி கொடுத்த பெரிய புலி பிரபாகரன் நந்திக் கடலோரம் மல்லாந்து கிடந்தது. பின்னர் பிரபல கேடியும், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனுமாகிய கேபி புலிகளுக்குத் தலைவனாகியது எல்லோருக்கும் தெரிந்ததே. சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் கேபி, புலப் பயங்கரவாத அமைப்பிற்கு சரியான, பொருத்தமான தலைவர் தான்.
பெரிய புலி கையைத் தூக்கியது தெரிந்ததும் வெளிநாடுகளில் உள்ள சொகுசுப் புலிகள் சுருட்டிய சொத்துக்களுடன் தலைமறைவாகி விட்டார்கள். இப்போ புதிய புலிகள் புதிதாகச் சொத்துச் சேர்க்கப் புறப்பட்டு விட்டார்கள். புலிப் பதவி இருந்தால் தானே புலன் பெயர்ந்ததுகளை சுத்திச் சீவிக்க முடியும். கள்ளக் கார்ட் வியாபாரிகள் உட்பட, வின்ஸர் விரிவுரையாளர் வரை பலர் மலேசியாவுக்குப் பறந்து போனார்கள். கேபி தரிசனம் கிடைத்த இவர்கள் இப்போது கதிகலங்கிப் போய் உள்ளார்கள். கேபி, புலிகளின் சர்வதேச வலைப் பின்னலைப் பற்றி மட்டுமல்லாது, மலேசியாவில் தன்னை சந்தித்தவர்களின் பெயர் விபரங்களையும் கொத்தபாயாவிடம் கூறிவிட்டாராம்.
முழுமை http://www.sooddram.com/Articles/Kusumban/Aug172009.htm
No comments:
Post a Comment