04 August 2009

மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் - கண்காணிப்பு அமைப்பு

யாழ் மக்களின் வாழ்க்கையில் இன்னமும் இயல்புநிலை ஏற்படாத நிலையில் மக்கள் மீது யாழ். மாநகரசபைத் தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் CMEV தெரிவித்துள்ளது. உள்நாட்டுத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றான CMEV யாழ்ப்பாணத்தில் தேர்தல் குறித்துப் பொதுமக்களிடையே பொதுவாக நல்ல அபிப்பிராயம் கிடையாதுஎன்று தெரிவிக்கும் CMEV யாழ். மாநகர சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அரசியற் கட்சிப் பிரமுகர்கள், யாழ். மாநகரசபைத் தேர்தல் வேட்பாளர்கள், அரச அதிபர், உதவித் தேர்தல் ஆணையாளர், சமுதாயத் தலைவர்கள், சமயத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள், சட்டத்தரணிகள், மீனவ சமூகங்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சாதாரண மக்கள் ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடியதைத் தொடர்ந்தே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அரசு முதலில் யாழ். மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று குறை கூறுகின்றனர். குறிப்பாகப் பாதுகாப்புக் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் அமுலில் இருப்பது குறித்துக் கவலையும், விசனமும் தெரிவித்தனர். ஊரடங்குச் சட்டத்தின் அமுலாக்கம், சோதனைச் சாவடிகளில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள், மீன்பிடித் தொழில் மீதான கட்டுப்பாடுகள் என்பன, நடைமுறையில் இருக்கும் பாதுகாப்புக் கெடுபிடிகளில் முக்கியமானவை என்று அவர்களால் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment