04 August 2009

13ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தும்

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, 13ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரங்களை வழங்குமாறு, இந்தியா அழுத்தங்களைக் கொடுப்பதற்கான தூண்டுதல்களை, புது டில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எதிர்வரும் காலங்களில் தீவிரப்படுத்தும் என செய்திகள் தெரிவிக்கின்றன.இலங்கைக்கான நிகழ்ச்சி நிரலொன்றை உருவாக்கும் முயற்சியில் வாஷிங்டனில் உள்ள ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான உதவி அமைச்சர் றொபேர்ட் ஒ பிளேக்கின் அலுவலகமும், அமெரிக்காவுக்கான புதுடில்லி மற்றும் கொழும்புத் தூதரகமும் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment