05 August 2009

அர்ப்பணிப்புடன் சேவையாற்றக் கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டும் - புளொட் தலைவர் சித்தார்த்தன்


எமது மக்கள் எதிர்கொள்ளும் துன்ப, துயரங்களை களைந்தெறிய களத்தில் நின்று துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றக் கூடியவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வவுனியா நகரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஆளுங்கட்சியில் இருந்து கொண்டு தான் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கலாம் என்பது வீணற்ற பிரசாரம். எந்தவொரு ஊழலும் இன்றி நிர்வாகத் திறமை மற்றும் சேவை மனப்பான்மை அர்ப்பணிப்பு என்பவற்றுடன் ஐந்து வருட காலம் வவுனியா நகரசபையைக் கட்டியெழுப்பிய அனுபவம் எம்மிடம் உள்ளது. அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லவே நாம் இந்தத் தேர்தலில் தனித்துவமாக எமது கட்சியின் நங்கூரம் சின்னத்திலும் யாருக்கும் விலை போகாமல் போட்டியிடுகின்றோம்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு நகரசபைத் தலைவர் ஊடாக கடந்த காலங்களில் வவுனியா நகரின் அபிவிருத்தியை மேம்படுத்தியது மட்டுமன்றி, எல்லைக் கிராமங்கள் அபகரிக்கப்படாமல் பாதுகாத்தவர்கள் யாரென்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். இக் கூட்டத்தில் முன்னாள் புளொட் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், நகரசபை முதன்மை வேட்பாளர் விஸ்வலிங்கநாதன், மாவட்ட அரசியல் துறைப் பவான் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment