இதுவரை 59 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் முறையிடப்பட்டுள்ளன : கபே
யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில், தேர்தல் விதிகளை மீறியமை அரச உடைமைகளை முறைக்கேடாகப் பயன்படுத்தியமை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 59 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே அமைப்பின் ஊடக இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். பதுளையில் - 29, மொனராகலையில்-20, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் முறையே 6 மற்றும் 4 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
No comments:
Post a Comment